வலிகாமத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளில் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைகாக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுள்து.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட அரச அதிபர், உள்ளூராட்சி ஆணையாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் செயலாளர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இராணுவ உயர் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விவசாயத்தில் ஈடுபடக்கூடிய வசதி
விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்குச் செல்லும் பாதைகள் பற்றைக் காடாகக் காணப்படுகின்றமையல் காணிகளுக்கான பாதைகள் பிரதேச சபையால் துப்புரவு செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும், அதன் பின்பு பொதுமக்களின் காணிகள் மாவட்ட செயலத்தால் துப்பரவு செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மீளளிக்கப்படுகின்ற விவசாய காணிகளுக்குள் மக்கள் சென்று விவசாயத்தில் ஈடுபடக்கூடிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அதன்படி மின்சார வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |