வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஆரம்பம்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் 10.30 மணியளவில் புனித திரேசா மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் இமானுவேல், அருட் தந்தையர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

