கடல் மாசடைவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கடல் சுற்றாடல் மற்றும் கரையோர வலயங்கள் மாசடைதலைக் கட்டுப்படுத்துதல், குறைத்தல் மற்றும் தடுத்தலுக்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது இன்று (15) அக்கரைப்பற்று, மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாநகர முதல்வர் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச மட்டத்தில் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான சட்டங்களை அமல்படுத்தக்கூடிய அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கரையோர பிரதேச முகாமைத்துவ குழுவொன்றினை நிறுவும் முனைப்பிலான முதல் கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
கரையோர சுற்றாடல் கட்டமைப்புகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, பூகோள அபிவிருத்தி இலக்கினை அடைந்து, கடல் சார்ந்த பிரதேசங்களைப் பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான இடங்களாய் பேணுதல் எனும் நோக்கில் அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட கடல் பிராந்திய வளங்களையும் மேம்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, மாநகர சபை
உத்தியோகஸ்தர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, சமுத்திர சுற்றாடல்
பாதுகாப்பு அதிகார சபையினர், கரையோரம் பேணல் திணைக்களத்தினர்,மத்திய சுற்றாடல்
அதிகார சபையினர், பொலிசார், மீன்பிடி திணைக்கள உத்தியோகஸ்தர் உட்படப் பலர்
கலந்து கொண்டனர்.





விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ News Lankasri