பாதுகாப்பு அமைச்சினால் விசேட கலந்துரையாடல்
நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சினால் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு அதிகாரிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்(Pramitha Tennakoon) தலைமையில் இன்று(24) இடம்பெற்றுள்ளது.
மரங்கள் முறிந்து விழும் அபாயம் குறித்து இந்த கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முகாமைத்துவ மத்திய நிலையம்
இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் இன்று வரை மரங்கள் முறிந்து விழுந்ததில் 6பேர் உயிரிழந்துள்ளதுடன் 11பேர் காயமடைந்துள்ளதாகவும் 18 மாவட்டங்களில் 9616 குடும்பங்களைச் சேர்ந்த 34880 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அரச திணைக்களங்கள், மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிவாரண சேவை நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் குறிப்பாக பாதுகாப்புபடை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர், பாதிக்கப்பட்ட மக்களுக்ககாக முன்னெடுத்து வரும் துரித நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக மரங்கள் விழும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'சுரகிமு' நிகழ்ச்சியின் மூலம் பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்தில் உள்ள மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வீதிகளில் மரங்கள் அதிகமாக விழுவதால் அவற்றைக் கட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண அதிகார சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஆதரவையும் அமைச்சர் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
வெள்ளப்பெருக்கு
அத்துடன், வீதியோரம் மரங்கள் நடுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் விசேட குழுவொன்றின் வழிகாட்டலின் கீழ் தேசியக் கொள்கையொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டிட நிர்மாணங்களால் தாழ்நிலப் பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மழை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சீரற்ற காலநிலை தொடர்பான அவசரநிலைகளை எதிர்கொள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri