அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து
அமெரிக்காவில் UPS நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெடித்து சிதறிய விமானம்
மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரகத்தைச் சேர்ந்த UPS 2976 என்ற விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
🇺🇸✈️💥 A UPS Airlines cargo plane with flight number UPS2976 (a McDonnell Douglas MD-11F) crashed shortly after takeoff from Louisville Muhammad Ali International Airport (Kentucky, USA). #USA pic.twitter.com/LVfreVv4yB
— 🔰 Military-News (@MilitaryNewsEN) November 4, 2025
இந்த விமானம் லூயிஸ்வில்லிலிருந்து ஹொனலுலுவில் உள்ள டேனியல் கே. இனூயே சர்வதேச விமான நிலையத்திற்குச் புறப்பட்ட நிலையில், நேற்று (04), உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
புறப்பட்ட உடனேயே விமானத்தில் இயந்திர கோளாறு அல்லது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரக்கு விமானமான இதில் மூன்று விமானப் பணியாளர்கள் மட்டுமே இருந்ததாக UPS உறுதி செய்துள்ளது.
விமான நிலையம் மூடல்
விமானம் தரையில் விழுந்தபோது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ ஒரு மைல் தூரத்திற்குப் பரவியது மற்றும் இதனால் கரும்புகை வானில் சூழ்ந்தது.

விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளதாக கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்து நடந்த லூயிஸ்வில் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய, தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் கியவை இணைந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam