இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! உயிர்பிழைத்தவரின் தற்போதைய நிலை

India Death Aircraft World Air India
By Shadhu Shanker Nov 04, 2025 11:04 PM GMT
Report

இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்துக்கு பிறகு, உடல் மற்றும் மன ரீதியான சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக குறித்த விபத்தில் உயிர்பிழைத்த நபரான விஸ்வாஸ்குமார் ரமேஷ், தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்திலுள்ள அஹமதாபாத் அருகே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து 241 பயணிகளின் உயிரைப் பலியாகினர்.

2026இல் பூமிக்கு வேற்றுகிரகவாசிகள்.. பாபா வங்காவின் கணிப்பு!

2026இல் பூமிக்கு வேற்றுகிரகவாசிகள்.. பாபா வங்காவின் கணிப்பு!

அதிர்ஷ்டசாலி

ஆனால் அந்த விபத்தில் சிக்கிய விஸ்வாஷ்குமார் ரமேஷ் என்பவர், யாரும் எதிர்பார்க்காத வகையில் தெய்வாதீனமாக உயிர்பிழைத்தார்.

இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! உயிர்பிழைத்தவரின் தற்போதைய நிலை | Air India Crash Sole Survivor Exclusive Interview

லண்டனுக்குப் புறப்பட்ட AI 171 விமானம் தரையில் விழுந்து நொறுங்கியபோது, அதன் சிதைவுகளில் இருந்து விஸ்வாஷ்குமார் ரமேஷ் உயிருடன் வெளியே வந்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறையவைத்தார்.

உலக மக்கள் விஸ்வாஷ்குமாரை “அதிர்ஷ்டசாலி” எனக் குறிப்பிட்டு வந்தநிலையில் தற்போது அவர் எப்படி உள்ளார் என்ற கேள்வியும் இருந்தது. இந்தநிலையில், மீள முடியாத துயரில் மூழ்கி, தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அவர் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

உடலளவில் ஏற்பட்ட காயங்கள் தன்னை வாகனம் ஓட்டவும், பணியாற்ற முடியாத நிலைக்கும் தள்ளியுள்ள நிலையில், தனது குடும்பத்தாரைப் பிரிந்து தனிமையில் தவித்து வருவதாக விஸ்வாஷ்குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்கும் அரசு தரப்பினர் யார்! சுட்டுக்கொல்லப்பட்ட மற்றுமொரு குற்றக்கும்பல் நபர்

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்கும் அரசு தரப்பினர் யார்! சுட்டுக்கொல்லப்பட்ட மற்றுமொரு குற்றக்கும்பல் நபர்

விமான விபத்து

குறிப்பாக விபத்திற்குப் பின் உடல் மற்றும் மன ரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்ட விஸ்வாஷ்குமார் ரமேஷ், தனது மனைவி மற்றும் மகனுடன் பேசுவதைத் தவிர்த்து லெஸ்டரில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! உயிர்பிழைத்தவரின் தற்போதைய நிலை | Air India Crash Sole Survivor Exclusive Interview

இரவு முழுவதும் விபத்தின் நினைவுகள் தன்னை வாட்டுவதாகத் தெரிவித்துள்ள விஸ்வாஷ்குமார், தனது ஒட்டுமொத்த குடும்பமும் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மன அழுத்த நோய் எனப்படும் PTSD மனநிலைக் கோளாறு விஸ்வாஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர் இதுவரை அதற்கு உரிய சிகிச்சைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையால் விஸ்வாஷ்குமாருடைய குடும்ப தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பக்க பலமாக இருந்து வரும் சமூக ஆர்வலர் சஞ்சீவ் படேல் மற்றும் ராட் சீகர் ஆகியோர், ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து போதுமான உதவிகள் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மன அழுத்தம்

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியில் உள்ள விஸ்வாஷ்குமார் மற்றும் குடும்பத்தாரை, ஏர் இந்தியா நிறுவனத்தார் நேரில் சந்தித்துத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விஸ்வாஷ்குமாருக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது அவரது உடனடி தேவைகளைப் பூர்த்திசெய்ய போதுமானதாக இல்லை என்றும் விஸ்வாஷ்குமாரின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! உயிர்பிழைத்தவரின் தற்போதைய நிலை | Air India Crash Sole Survivor Exclusive Interview

அதே வேளையில், ஏர் இந்தியா நிறுவனமோ தங்கள் உயர் அதிகாரிகள் பலமுறைப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும், விஸ்வாஷ்குமாரின் குடும்பத்தைச் சந்திக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

விஸ்வாஷ்குமார் ரமேஷின் வாழ்க்கை அவருக்கு உயிர் பிழைக்க அதிர்ஷ்டத்தை வழங்கியிருந்தாலும், அன்புக்குரிய சகோதரரைப் பறித்து, மன அழுத்தத்தில் போராடும் நிலையை உருவாக்கியுள்ளது.

மேலும் உடல் காயங்கள் குறித்து பேசிய விஸ்வாஸ்குமார் ரமேஷ், தனக்கு கால்கள், தோள்கள், முழங்கால்கள் மற்றும் முதுகில் வலி இருப்பதாகவும், விபத்துக்கு பிறகு வேலை செய்யவோ, வாகனம் ஓட்டவோ முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US