2000 ரூபாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய போதைப்பொருள் வியாபாரி
நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 29 வயதுடைய சந்தேக நபர் 2000 ரூபாவுக்கு ஆசைப்பட்ட நிலையில் கைதாகியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று (04.11.2025) இந்தச் சந்தேக நபர் கைதானார்.
சந்தேக நபரை கைது செய்ய போதைப்பொருள் கொள்வனவு செய்பவர் போன்று மாறுவேடத்தில் சென்ற பொலிஸார் 70 மில்லிகிராம் போதைப்பொருளை பேரம் பேசி ரூபா 2000 ரூபாவை கைமாற்றும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சட்ட நடவடிக்கை
இவ்வாறு கைதானவர் 29 வயது மதிக்கத்தக்க குவைத் சிட்டி நிந்தவூர் 9 பிரிவில் வசிக்கும் சந்தேக நபர் என்பதுடன் சந்தேகநபர் வசமிருந்து 1250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ரூபா 20 ஆயிரம் பணம், 2 கைத்தொலைபேசிகள், போதைப் பொருளை அளவீடு செய்வதற்கான இலத்திரனியல் தராசு உள்ளிட்டவைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சோதனை நடவடிக்கையில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே இணைந்து ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கைதான சந்தேக நபர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைபடுத்த நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam