பாதாளக் குழு உறுப்பினர் 'குடு சலிந்து'வின் இரு சகாக்கள் போதைப்பொருளுடன் கைது
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'குடு சலிந்து' என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன என்பவரின் சகாக்கள் இருவர் களுத்துறை பிரதேசத்தில் வைத்து வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று(4) தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
வலான ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகமை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணும், தியகம பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய ஆணுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 301 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 250 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஆணிடமிருந்து 25 கிராம் 740 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் 'குடு சலிந்து' என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புபட்டிருக்கும் அரசு தரப்பினர் யார்! சுட்டுக்கொல்லப்பட்ட மற்றுமொரு குற்றக்கும்பல் நபர்
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam