பிரான்ஸ் பொண்டி மாநகரசபை முதல்வருடன் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல்
பிரான்ஸ் பொண்டி மாநகரசபை முதல்வருடன் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடலொன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது, 72 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழின அழிப்புத் தொடர்பான அனைத்து விடயங்களும் நகரசபை முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பாக பிரான்ஸ் அரசின் நிலைப்பாட்டினை மாநகரசபை முதல்வர் கேட்டறிந்துள்ளார். பொண்டி நகரசபை மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது.
அந்தவகையில் ஈழத்தமிழ் மக்களுக்கு தமது முழு ஆதரவையும் தெரிவித்திருந்தார் முதல்வர். விரைவில் தமிழ் மக்கள் நீதி பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் இதன்போது வெளியிட்டுள்ளார்.
மேலும் தமிழ் மக்கள் தமது நீதியைப் பெறுவதற்கு பொண்டி நகரசபையால் செயல்படுத்த முடிந்த அனைத்து நகர்வுகளையும் தாம் செயற்படுத்தி தருவதாக உறுதியளித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் இரு துணைமுல்வர்களும், உயர் அதிகாரிகளும், பொண்டி நகரசபை உறுப்பினர் செல்வி பிரபாகரன் பிறேமி, பொண்டித் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.