அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் (Photos)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் கொழும்பு - கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் இன்றைய தினம் (25.06.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படும் மலையக வீடமைப்பு திட்டம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், இந்தியாவின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டம் சம்பந்தமாகவும் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.
வீட்டுத் திட்டம் பணிகள்
மேலும், வீடமைப்பு திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த அமைச்சர், வீட்டுத் திட்டம் பணிகள் விரைவாக நிறைவுபெற முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சின் மேலதிக செயலாளர் தீப்தி, திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் வஹாப்தீன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் லால் பெரேரா, அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
