கிளிநொச்சியில் திட்டமிடல் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் மற்றும் தீர்வு கானப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் இன்று(14.05.2026) கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலக மாநாட்டு மாவட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கபில சந்திரசேனவின் விவகாரம்! அறையில் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி அட்டை - பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
இதன்போது, வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த திணைக்களங்களிடமிருந்து அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், சமூக சக்தி நிதி ஒதுக்கீடுகள், மீள்குடியேற்ற வீட்டுத்திட்ட ங்கள் , சுற்றுலாத்தளங்கள் அபிவிருத்தி, அனர்த்த தணிப்பு செயற்திட்டங்கள்,2026ஆம் ஆண்டு அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகள்,முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்க வேண்டிய பாலங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு உபகுழுககளின் செயற்பாடுகள், பிரதேச செயலக டிஜிட்டல் மயமாக்கல் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவளை, டிட்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கல், மக்களுக்கான காணி ஆவணங்கள் மற்றும் காணிப் பிணக்குகள், மணல் விநியோகம், நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் வீதி அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக பேசப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), உதவி மாவட்டச் செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களத்தின் அதிகாரிகள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், விடயம் சார் உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam