யாழில் முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட கொட்டடி கிராமத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்தி்ட்டத்தை இன்று (05.01.2024) யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையில் கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
சிவப்பு அறிவித்தல்கள்
இதன்போது 80 ற்கும் மேற்பட்ட வீடுகள் தரிசிப்பு செய்யப்பட்டதோடு அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும், டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக வளவினை வைத்திருந்த 12 பேரிற்கு சிவப்பு அறிவித்தல்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் வீட்டுவளவுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட 08 பேரிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
