பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், திகதியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும் (02) ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

க.பொ.த. உயர்தர பரீட்சை
மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண மட்டத்திலான பாடசாலைகளை முதலில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam