செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் நகர் பகுதிகள், கே.கே. எஸ். வீதி மற்றும் திருநெல்வேலி கடைகளில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி செயற்கைத் தட்டுப்பாடு மற்றும் பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
வழக்கு தாக்கல்
மேலும், யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை திடீர் பரிசோதனையில் கீரிச்சம்பா அரிசி கடையில் விற்பனைக்காகவிருந்தும், அதனை விற்பனைக்கு மறுத்த கடை உரிமையாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri
ஓவராக பேசிய அறிவுக்கரசி, தூக்கிபோட்டு மிதித்து சம்பவம் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தரமான புரொமோ Cineulagam