இன்று முதல் குறையும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள்! வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
புதிய இணைப்பு
பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்புப் பண்ட வரியை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (12) நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, இந்த வரிக்குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் (13) குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக பண்ட வரி குறைப்பு
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் கருவாட்டுக்கான மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி ஒரு கிலோகிராமுக்கு 100 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மாசி மீனுக்கான வரி கிலோகிராமுக்கு 302 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும், மிளகாய்த் தூள் மற்றும் தூளாக்கப்படாத உலர்ந்த மிளகாய்க்கான வரி கிலோகிராமுக்கு 50 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.
இந்த வரி திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் (13) குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் ஐந்து மணிநேர உரை! 220 இலட்சம் மக்கள் எதிர்நோக்கும் பாரிய சிக்கல் தொடர்பில் சஜித் விமர்சனம்


