கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் ஆராய விசேட குழு
கஞ்சா பயிரை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருமானத்தை உழைப்பது சம்பந்தமாக ஆராயும் யோசனை ஒன்றை முன்வைப்பதாக ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஏற்றுமதிக்காக மாத்திரம் கஞ்சா பயிரிடுவது தொடர்பில் ஆராய்வு
இதனடிப்படையில், கஞ்சாவை ஏற்றுமதிக்காக மாத்திரம் பயிரிடுவது தொடர்பாக ஆராய விசேட குழுவை நியமிக்குமாறு யோசனை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கஞ்சாவை ஏற்றுமதிக்காக பயிரிட வேண்டும் என தொடர்ந்தும் கூறி வரும் டயனா கமகே
கஞ்சாவை ஏற்றுமதி செய்ய பயிரிட வேண்டும் என்ற யோசனையை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தொடர்ந்தும் முன்வைத்து வந்துள்ளார். கஞ்சாவை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை வருவாயாக ஈட்ட முடியும் எனவும் அவர் கூறியிருந்தார்.
கஞ்சா பயிரானது ஆயுர்வேத மருந்துகள், வாசனை திரவியங்கள் உட்பட பல தயாரிப்புகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
