மருந்துக்காக மட்டுமே கஞ்சா பயிரிட அனுமதி-புகைப்பதற்கு அனுமதியில்லை-சிசிர ஜயகொடி
புகைப்பதற்காக கஞ்சாவை பயன்படுத்த ஆயுர்வேதத்தில் எவ்வித அனுமதியும் இல்லை எனவும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் பரஸ்பர கருத்துக்கள் இருப்பதாகவும் சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மருந்துக்காக பயிரிட மட்டுமே கஞ்சா பயிரிட அனுமதி

மருந்துக்காக மாத்திரம் கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கு அல்லது வேறு தயாரிப்புகளுக்கு கஞ்சாவை பயன்படுத்த அனுமதியில்லை.
மருந்துக்காக கஞ்சாவை பயிரிட சட்ட ரீதியாக அனுமதியை பெற்றுக்கொள்ள அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பத்திரத்திற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அனுமதி கிடைக்கும்.
ஐ.நாவுடனான இணக்கப்பாட்டுக்கு அமைய மருந்து மற்றும் விஞ்ஞானத்திற்காக கஞ்சாவை பயிரிட முடியும்

அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர், மருந்துக்காக கஞ்சாவை பயிரிடுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு வரையறை உருவாக்கப்படும். ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை கையெழுத்திட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைய மருந்து மற்றும் விஞ்ஞான நோக்கங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்த முடியும்.
கஞ்சா சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மருந்துக்கான கஞ்சா பயிரிடுவதை சட்டமா அந்த குழு இணக்கம் வெளியிட்டுள்ளது எனவும் ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி கூறியுள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri