கஞ்சாவை சட்டமாக்க துடிக்கும் சிங்கள அரசும், அதை ஒழிக்க நினைக்கும் சமூக ஆர்வலர்களும்

Sri Lankan Tamils SLPP Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lanka Government
By Independent Writer Oct 13, 2022 12:54 PM GMT
Report
Courtesy: அ.மயூரன் M.A.

கடந்த சில மாதங்களாக தமிழர்கள் வாழும் வடபகுதியில் கஞ்சா உட்பட்ட போதைப்பொருட்களின் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளது.

இது கடந்த வருடந்தினை விடவும் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது,கடந்த மூன்று மாதங்களில் போதைப்பொருளுக்கு அடிமையாவதால் ஏற்படும் உயிரிழப்பானது சடுதியாக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும், இவ்வருடம் 11 பேர் இவ்வாறு போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்துள்ளதாகவும், இவ்வுயிரிழப்புக்கள் குருதி நாளங்களினூடாக உடலில் போதைப் பொருளை ஏற்றுகின்ற பொழுதே அதிக அளவில் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பெண்கள்

கடந்த வருடம் போதைப்பொருள் பாவனையால் யாழ்.சிறைச்சாலையில் 10 பெண்கள் உட்பட 491 பேர் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் 13 பெண்கள் உட்பட 854 பேர் சிறைச்சாலையிலும், 165 பேர் யாழ்.சட்ட மருத்துவ அதிகாரியின் அலுவலகத்திலும் சேர்க்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றனர்.

யாழ்.மாவட்டத்திலுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இவர்கள்18 முதல் 23 வயதிற்கிடைப்பட்ட யாழின் பிரபல பாடசாலை மாணவர்கள் ஆவர்.

அரசால் இரண்டு மாதங்களிற்கு முன் திறக்கப்பட்ட, போதை மறுவாழ்வு நிலையத்தில் 134 பேர் தமது தரப்பினரால் புனர்வாழ்வுக்காக சேர்க்கப்பட்டதாகவும், யாழ்.பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.

மேற்சொன்ன தகவல்கள் யாழ் மாவட்டத்தின் தரவுகள் மட்டுமே.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை

இதேநேரம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை வலியுறுத்தி யாழ்.வைத்தியசாலை சமூகம் ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை பேரணியாகச் சென்று யாழ்.மாவட்ட அரசு அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளித்துமிருந்தனர்.

அதில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் முப்படையினரையும் ஈடுபடுத்துதல், போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தகவல்களை வழங்குவோரைப் பாதுகாத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்குரிய கட்டமைப்புக்களை உருவாக்கிச் செயற்படுத்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கி இருந்தன.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிய 273 கடல் மைல்கள் நீளத்தில் மன்னார் முதல் வெற்றிலைகேணி வரை 93 காவல் கண்காணிப்பு நிலைகளை நிறுவி விசேட ரோந்து நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபடுவதாகவும் கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடற்படையும் கண்காணிப்புப் புலனாய்வாளர்களும் 24 மணிநேரமும் யாழ்.கடற்பரப்பை கண்காணிக்கும் பொழுதும் தாராளமாக வடற்கிற்குள் கஞ்சாவும் ஏனைய போதைப்பொருட்களும் கடத்தப்படுவதைத் தடுக்க இவர்களால் முடியவில்லை.

கேரளாவில் இருந்து தென்னிந்தியா வழியாக வடபகுதிக்குள் கடத்தப்படும் கஞ்சாவை கடற்படையினரின் ஒத்துழைப்புடனேயே கடத்தல்காரர்கள் செய்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடற்படையின் இக்கண்காணிப்பையும் மீறி போதைப்பொருள் இறக்குமதியில் வட மாகாணமே முன்னணியில் திகழ்கிறது.

பொதுவாக வறுமை கோட்டுக்குட்பட்ட மீனவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இக்கடத்தல்களை செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

தாராளமாக கிடைக்கும் போதைப்பொருள்

காங்கேசன்துறை,பருத்தித்துறை முனைப்பகுதி, குருநகர், உடுத்துறை ஆழியவளை, நாவாந்துறை கேவில் ஆகிய கிராமங்களும் மன்னார் பகுதியும் முக்கிய கடத்தல் மையங்களாகத் திகழ்கிறன.

கடற்படையினர் அவ்வப்போது சாட்டுக்கு சில போதைப்பொருட்களைக் கைப்பற்றினாலும் தாராளமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனையிலுள்ளன.

யாழ்.மாவட்ட கரையோரப் பகுதிகளிலுள்ள கடற்தொழிலாளர்கள் சிலர் பல வருடங்களாக தென்னிந்தியா ஊடாகப் பல விதமான போதைவஸ்துக்களை சிறு படகுகள் மூலம் ஏற்றி வருகின்றனர்.

இதற்கு கடற்படை , பொலிஸ், இராணுவ உளவுத்துறை முதலானவர்களின் ஒத்துழைப்பும் இருப்பதோடு இக்கடத்தல் செயல்கள் பற்றித் தெரிந்திருந்தும் இப்பகுதிகளில் உள்ள பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள், சில அரசியல் வாதிகள் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல்கள்

பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வரையான பகுதிகளிலேயே கூடுதலான போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன.

இதில் கேவிலிலுள்ள கடற்படை முகாமுக்கு அருகில் அவர்களின் உதவியுடனேயே கேரள கஞ்சா இறக்கப்பட்டு அங்கிருந்து யாழ்.மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாண பகுதிகளுக்கும் இக் கஞ்சாக் கடத்தல்கள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசங்களிலுள்ள பலர் ஒரு குழுவாக இணைந்து பாரிய முதலீட்டினைச் செய்து இக்கடத்தல் தொழிலைச் செய்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட கடத்தல் முதலாளிகளின் வீட்டில் பொலிஸார் இரவு நேரத்தில் விருந்துபசாரமும், குடிபானமும் குடித்து சந்தோசமாக களித்து வருகின்றனர்.

இதனால் எங்களுடைய சமூகத்திலுள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப்பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் சமூகவிரோதச் செயல் குறித்து பல இடங்களில் முறையிட்டும் யாழ்.மாவட்டத்தில் பொது அமைப்புக்களோ, அரச அதிகாரிகளோ, அரசியல் வாதிகளோ இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

இலங்கையில் சட்டபூர்வமாக்கப்படும் கஞ்சா

அத்துடன் கஞ்சாவினை இலங்கையில் சட்டபூர்வமாக்க சிங்கள அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது.

கஞ்சாவானது மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது. இது புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

காலணித்துவ காலத்தில் இலங்கையில் பெயரளவில் தடை செய்யப்பட்ட கஞ்சா பின்னர் 1929 இல் ஓபியம் மற்றும் ஆபத்தான போதைப் பொருள்களுக்கான சட்டம் திருத்தப்பட்டு கஞ்சா தடை செய்யப்பட்டது.

இருந்தபோதும் அரசு 1961 ஆம் ஆண்டு ஆயுர்வேத சட்டம் இயற்றப்பட்டு மருத்துவர்கள் மருத்துவ தயாரிப்புக்கு இக்கஞ்சாவினை அனுமதித்தது. பின் ஆயுர்வேத பயன்பாட்டுக்கு கஞ்சா பயன்படுத்தப்பட்டுவந்தது.

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமயிலான அரசாங்கத்திற்கு ஆதரவு அழிக்கும் சமகி ஜன பல வேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கஞ்சா சாகுபடி மற்றும் ஏற்று மதியை அனுமதிப்பதன் மூலம் இலங்கை கணிசமாக ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுவதனூடாக சர்வதேச கடன் வழங்கும் நாடுகளை நம்பியிருக்கத் தேவையில்லை என்கிறார்.

இதன் மூலம் பல பில்லியன் டொலர்களைச் சம்பாதிக்க முடியுமென தொடர்ந்தும் தெரிவித்துவரும் நிலையில் கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் முயற்சியாகவே சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அமைச்சரவையில் இதற்கான தீர்மான முன்மொழிவைச் சமர்ப்பித்து அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வடக்கு தமிழர்களை கலாச்சார ரீதியாக சிதைத்தல்

கஞ்சா சட்டபூர்வமாக்கப்படுமானால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பலர் இத்தொழிலை செய்வதற்கு வழி சமைக்கிறது. அத்தோடு வடக்கில் ராணுவம் மேலும் இதை விரிவு படுத்த சந்தர்ப்பம் உண்டு.

இராணுவத்தினரால் வடக்கில் கடத்தல்களுக்கு ஆதரவளிப்பது போல் அதைத் தெற்கில் செய்ய முடியாது. இதன் மூலம் பாதிக்கப்பட போவது வடக்கு கிழக்கு தமிழர்களே.

அத்துடன் இந்தியாவைச் சீர்குலைப்பதற்கான சீனாவின் நீண்ட கால திட்டங்களில் ஒன்று இந்த போதைப்பொருள் வர்த்தகமாகும்.

இதனை இலங்கை அரசின் ஊடாக ஊக்குவிப்பதன் மூலம் தமிழகத்தையும் கேரளத்தையும் இந்தியாவிலிருந்து பிரித்து இந்தியாவை தூண்டாடுவதற்கான அதன் நீண்டகாலத் திட்டத்தில் இது ஒன்று எனலாம்.

எனவே கஞ்சாவை சட்டமாக்குவது வடக்கு தமிழர்களை கலாச்சார ரீதியாக சிதைப்பதும் இந்தியாவை துண்டாடுகின்ற முயற்சியுமாகும். 

ஈழத் தமிழரைச் சிதைப்பது பொறுத்தும் தென்னிந்தியாவை குற்றக் கும்பல் மயமாக்குவதற்கும் அடிப்படையான ஓர் விடயமாக சிங்கள-சீன அரசுகள் இதனை முன்னெடுக்கின்றன எனத் தெரிகிறது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US