மன்னாரில் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற விசேட அபிவிருத்திக் குழு கூட்டம்
மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்றையதினம்(10.02.2026) இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஒருங்கமைப்பில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு விடயங்கள் ஆராய்வு
மேலும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள் ,கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார் நகர சபை,மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, மன்னார் மாவட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
எதிர்வரும் காலத்தில் இந்த போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் குறைந்தது ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறையாவது தொடர்ந்து கூடும் என நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம்.
எமது அமைச்சரவை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் மூலம், ஒரு அளவிற்கு தீர்வுகளைப் பெற முடிந்ததாக நாங்கள் கருதுகிறோம்.
அரசியல் தலைவர்களும் நிர்வாக தலைவர்களும் திட்டமிட்டுள்ள வகையில் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.







வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam