பாடசாலைகளில் விழாக்களை நடத்த கட்டுப்பாடு: வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கை
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படும் நிகழ்வுகள் ஏழாக மட்டுப்படுத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு சுற்றறிக்கை
சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பெற்றோரிடம் பணம் வசூலிப்பதாக வரும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சுற்றறிக்கை மத்திய அரசாங்கத்தினாலும் மாகாணசபையினாலும் நிர்வகிக்கப்படும் அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் விழா நடத்த அனுமதி வேண்டும்
அந்த சுற்றறிக்கையின் பிரகாரம் முதலாம் தவணையில் மூன்று விழாக்களும் இரண்டாம் தவணைகளில் நான்கு விழாக்களும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக ஏதேனும் விழா நடத்தினால் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும்.
முதல் பருவத்தில் பிள்ளைகள் சேர்க்கை விழா, சுதந்திர விழா, இல்லங்களுக்கு இடையேயான தடகள விழாவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவத்தில் கல்விச் சுற்றுலா, கலை விழா, வண்ண விழா, ஆண்டு பரிசளிப்பு விழா நடத்தவும் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri