தமிழரசுக் கட்சியின் தலைவிதி திருமலையில் இன்று நிர்ணயம்
தமிழினத்தின் வரலாற்றில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் திருகோணமலையில் இன்று (21.01.2024) கூடி இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
அத்துடன், தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், புதிய தலைவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தமிழரசுக் கட்சி அண்மையில் தீர்மானித்திருந்தது.

வரலாற்றில் முதல் முறை
தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

மேலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam