குறைகள் அனைத்தும் மனிதனை திடப்படுத்துவதற்கான உந்துசக்தி: புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் சுட்டிக்காட்டு
மனிதனிடம் காணப்படும் குறைகள் ஒருபோதும் குறைகள் அல்ல எனவும், அவை அனைத்தும் ஒரு மனிதனை திடப்படுத்துவதற்கான உந்துசக்தி எனவும் புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும், ஐபிசி தமிழ், லங்காசிறி குழுமத்தின் தலைவருமாகிய கந்தையா பாஸ்கரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி - இயக்கச்சி றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெற்ற விசேட தேவையுடைய மாணவர்களுக்கான நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
'' சிறு மற்றும் தொழில் முயற்சியாளர்களாக வளர ஆரம்பிக்கும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
உறுதியான மற்றும் திடமான எதிர்காலத்தை வளர்த்துக்கொள்ள நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
அத்தோடு இயற்கை முறையிலான விவசாயத்தினை கற்றுக்கொண்டால் நீங்களும் நாளை ஒரு தொழிலதிபராக மாறலாம்'' என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



