இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் : சடுதியாக அதிகரித்துள்ள எண்ணிக்கை
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள்
இதன்படி, இம்மாதத்தின் கடந்த எட்டு நாட்களில் மாத்திரம் 60,122 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், கடந்த மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.
ரஷ்யாவிலிருந்து 8,755 சுற்றுலாப்பயணிகளும், இந்தியாவிலிருந்து 8,369 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 4,423 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா சபையின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 12 மணி நேரம் முன்
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam