பொலிஸாருடன் கைகோர்க்கும் இராணுவத்தினர்! களமிறக்கப்பட்டுள்ள படையினர்
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸாருக்கு தமது ஆதரவை வழங்குவதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
நாட்டின் மக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் பங்களிப்பதாக இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் நிலவும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் அமைதியான சூழலைப் பேணுவதற்காக ரோந்து மற்றும் வேகத்தடைகளை அமைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படையின் மோட்டார் சைக்கிள் அணியும் இலங்கை இராணுவ விசேட அதிரடிப்படையினரும் இன்று (11) கொழும்பு நகரில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan