மீளப்பெறப்படவுள்ள சிலிண்டர்கள்! சற்று முன்னர் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
கடைகள் மற்றும் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத எரிவாயு கொள்கலன்கள் மீளப் பெறப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 4ம் திகதிக்கு முன்னதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள அல்லது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள முத்திரை அகற்றப்படாத எரிவாயு கொள்கலன்கள் மீளப் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களாக நாட்டில் எரிவாயு சிலிண்டர்களும், எரிவாயு அடுப்புக்களும் வெடித்துச் சிதறியதையடுத்து நாட்டில் பெரும் சர்ச்சையாக இது மாறியிருந்தது.
சர்வதேச ஊடகங்களும் இந்த வெடிப்புச் சம்பவங்களை முக்கிய செய்திகளாக வெளியிட்டிருந்தன. எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கடுமையாக விமர்சித்திருந்தன.
இந்நிலையில், எரிவாயு நிறுவனங்கள் இது தொடர்பில் தற்போது சில மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
