பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி! - பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
பிரித்தானியாவில் எரிபொருட்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த நிலைமை மேம்படத் தொடங்கியுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் (Boris Johnson) தெரிவித்துளளார்.
இந்நிலையில், சாதாரண வழியில் இருந்து தங்களின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் தொழிற்துறையிலிருந்து வரும் அறிகுறிகள் சாதாரண நிலைக்குத் திரும்புவதன் மூலம் நிலைமை மேம்படத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"முன்கூட்டியே நிலைமை சீராகி வருவதாகவும், மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள போரிஸ் ஜோன்சன் சாதாரண வழியில் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ளுங்கள்," எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, “நாட்டில் ஏற்பட்டிருந்த எரிபொருள் நெருக்கடி தற்போது குறையத்தொடங்கியுள்ளதாக“ பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்மும் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
தொற்றுநோய் மற்றும் பிரெக்சிட் உள்ளிட்ட பல காரணிகளால் பிரித்தானியாவில் லாரி ஓட்டுநர்கள் பணியில் கடும் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தற்போது எரிபொருள் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் சுமார் 100,000 ஓட்டுனர்கள் தேவை என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து நிலைமையை சரிசெய்வதற்கும், தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்கவும் தற்காலிக விசா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையினை தற்காலிகமாக சீர்செய்வதற்கு 150 இராணுவ எரிபொருள் விநியோக ஓட்டுனர்களை பயன்படுத்த தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே, பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மேம்படத் தொடங்கியுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.