எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
எரிபொருள் விலையில் திருத்தம் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
டொலருக்கு நிகரான எரிபொருள் விலையினால் அரசாங்கம் தற்போது நட்டத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.
விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், நிதியமைச்சினால் விதிக்கப்படும் வரிகள் நீங்கலாக 92 ஒக்டோன் பெற்றோலினால் 13.38 ரூபா நட்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெட்ரோல் 95 ஒக்டோன் பெற்றோலினால் 3.28 ரூபா, லங்கா ஆட்டோ டீசலினால் 68.79 ரூபா, லங்கா சுப்பர் டீசலினால் 67.46 ரூபா மற்றும் மண்ணெண்ணெய்யினால் 232.33 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri