வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு பணம் அனுப்புவோருக்கான எச்சரிக்கை! மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி நடவடிக்கை
சட்டவிரோதமாக நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம். உரிய முறையில் நாட்டுக்கு பணத்தை அனுப்புவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சட்டத்திற்கு புறம்பாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற கணக்குகள் தடை செய்யப்படுகின்றன. சட்டவிரோதமாக நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம். உரிய முறையில் நாட்டுக்கு பணத்தை அனுப்புவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சட்டவிரோத கணக்குகளுக்கு தடை விதிப்பதற்கான அதிகாரம் காணப்படுகின்றது.
யுத்த காலத்திலும் இவ்வாறான கணக்குகள் தடை செய்யப்பட்டன.
எனவே, உரிய முறையில் பணத்தை அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி