இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமையைப் பொறுத்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் தேவையான நேரடி தலையீட்டை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் தொடர்ந்து கோரப்பட்டு வருவதாக அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
