காலிறுதியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதல்
இந்த ஆண்டு நடைபெற்றுவரும் யூரோ காற்பந்தாட்டத் தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படும் ஜெர்மனி (germany) மற்றும் ஸ்பெயின் (Spain) ஆகிய நாடுகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி இன்று (05.07.2024) நடைபெறவுள்ளது.
ஜெர்மனி அணி இந்தத் தொடரை நடாத்தும் அணியாக உள்ள அதேவேளை, ஸ்பெயின் அணி இந்த தொடரின் சிறந்த அணியாக கருதப்படுகின்றது.
இந்த தொடர் ஆரம்பிக்கும் போது ஜெர்மனி அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை.
முழுமையான அணி
எனினும், இந்தத் தொடரில் பெற்ற ஒவ்வொரு வெற்றியிலும் ஜெர்மனி அணி தன்னை ஒரு பலம் வாய்ந்த அணியாக நிரூபித்துள்ளது.
கடந்த வருடம் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் ஜெர்மனி அணி 4 -1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. எனினும், இந்த யூரோ தொடரில் 5 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியதன் பின்னர் ஜெர்மனியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதேவேளை, தொடர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஒரு பலம் வாய்ந்த அணியாக காணப்படும் ஸ்பெயின், வீரர்களின் அனைத்து நிலைகளிலும் (Formation) முழுமையான அணியாகவும் உள்ளது.
இதனால், ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
