சர்வதேச கடற்பரப்பில் சமூக ஆர்வலர்கள் கடத்தல்: இஸ்ரேலுக்கு ஸ்பெயின் கடும் கண்டனம்
காசா பகுதிக்கு கடல் வழியாக உதவிப் பொருட்களைக் கொண்டு சென்ற 'குளோபல் சுமூத்' என்ற சர்வதேச உதவிக்குழுவின் கப்பலில் பயணித்த சமூக ஆர்வலர்களை இஸ்ரேல் இராணுவம் சிறைபிடித்துள்ளதற்கு ஸ்பெயின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கிரீஸ் நாட்டிற்கு அருகிலுள்ள சர்வதேசக் கடல் பகுதியில் வைத்து இவர்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள ஸ்பெயின் அரசு, தனது நாட்டு ஆர்வலரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
சிறைபிடிக்கப்பட்டுள்ள இரு ஆர்வலர்களும் தங்களுக்கு இழைக்கப்படும் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளைக் கண்டித்து கடந்த ஆறு நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக 'அதாலா' என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
கண்டனம்
இஸ்ரேல் எல்லையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேசக் கடல் பரப்பில் வைத்து இவர்களைக் கடத்தியது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், இந்த விவகாரத்தில் இஸ்ரேலிய நீதிமன்றங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

தற்போது இவர்களது சிறைக்காவல் நீடிக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இடையே இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri