முகமூடி இராணுவத்தால் கலக்கத்தில் தென்னிலங்கை மக்கள்! சிறப்பு படையணியும் களத்தில் (VIDEO)
வடப்பகுதியிலும்,தென்னிலங்கை பகுதியிலும் அதிகளவு படுகொலைகளை செய்த உந்துருளிகளில் வருகை தரும் படையினரின் வருகை என்பது தற்போது படுகொலைகளை அரங்கேற்றுவதற்கான முன்னோடியாக காணப்படுவதாக பிரித்தானியாவின் வேல்ஸில் இருக்கும் (கலாநிதி பிரபாகரன்) இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், இலங்கை முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது முகமூடி அணிந்து போராட்ட இடங்களுக்குள் நுழைந்துள்ள படையினர் குறித்து இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தெளிவாக தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிள் படையணியானது அரசாங்கத்திற்கு எதிராக போராடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
