இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை தொடர்பில் வெளியான தகவல்
இந்தியப் பெருங்கடலில் இன்று(01.10.2025) அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
எனினும், இலங்கை மற்றும் இந்தியக் கடற்பிராந்தியங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முழுமையாக உறுதி செய்துள்ளது.
உயிர்சேதம் அல்லது சொத்து சேதம்
மேலும் தரவுகளின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதியாகும்.
எனவே, உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை.
Region: Southeast Indian Ridge
— EarthquakesGA (@EarthquakesGA) October 31, 2025
Mag: 6.0
UTC: 2025-10-31 20:53:26
Lat: -45.29, Lon: 96.94
Dep: 10km
For more info and updates, or if you felt this earthquake, go to https://t.co/vWvPNjWABa
இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலின் டெக்டோனிக் தட்டு (Tectonic Plate) எல்லைகளுக்கு அருகில் நிகழும் வழக்கமான நில அதிர்வுகளில் ஒன்றாகும்.
இப்பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகுவது இயல்பானது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |