லண்டனில் பாரிய தீவிபத்து - 100க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்
தென்கிழக்கு லண்டனில் உள்ள டவர் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சுமார் 120 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ப்ரோம்லியில் உள்ள செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் உள்ள 17 மாடி கட்டிடத்தின் 15வது மாடியில் கூரையின் ஒரு பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாக லண்டன் தீயணைப்புப் படை (LFB) தெரிவித்துள்ளது. யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை
எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் சாய்ந்த கூரையின் ஒரு பகுதியில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் கருப்பு புகை வருவதைக் காட்டியது.
"தமது குழுக்கள் சீரான முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இது ஒரு நீடித்த சம்பவமாக இருக்கும், மேலும் எங்கள் குழுவினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்." என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"சிலர் வருத்தப்பட்டு அழுதனர், மற்றவர்கள் அதிர்ச்சியடைந்து என்ன நடக்கிறது என்று குழப்பமடைந்தனர் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam