கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட தென்கொரிய எதிர்க்கட்சி தலைவர்
தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டில் உள்ள விமான நிலையத்தின் இடத்தை சுற்றிப்பார்க்கும்போது அடையாளம் தெரியாத ஒருவரால் லீ தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய சந்தேகநபர் எதிர்க்கட்சி தலைவரிடமிருந்து கையெழுத்து வாங்குவதாக கூறி அருகில் வந்து பின் அவரை தாக்கியுள்ளார்.
ஜனாதிபதி கண்டனம்
இருப்பினும் தாக்குதல் நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விரைவாக குணமடைய சிறந்த கவனிப்பை வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |