இலங்கைக்கான விசேட பயண ஆலோசனையை வெளியிட்டது தென் கொரியா!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில் தென் கொரியா இலங்கைக்கான சிறப்பு பயண ஆலோசனையை இன்று வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரிய பிரஜைகள் இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை இரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ அல்லது ஏற்கனவே இலங்கையில் இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே தென் கொரியா இலங்கைக்கான சிறப்பு பயண ஆலோசனையை இன்று வெளியிட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 15 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
