தென் கொரிய நிறுவனத்தில் 33 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவு கசிவு
தென் கொரியாவின் பிரபல இணையவழி வர்த்தக மற்றும் டெலிவரி நிறுவனமான கூபாங், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை பாதுகாப்பதில் தவறியதற்காகவும், தகவல் கசிவை சரியான நேரத்தில் அரசுக்கு தெரிவிக்காததற்காகவும் 408 மில்லியன் டொலர் (சுமார் 624.6 பில்லியன் வோன்) சாதனை அளவிலான அபராதத்திற்கு உள்ளாகியுள்ளது.
தென் கொரிய நாட்டின் வரலாற்றிலேயே ஒரு நிறுவனத்திற்கு தரவு கசிவு விவகாரத்திற்காக விதிக்கப்படும் மிக உயர்ந்த அபராதம் இதுவாகும்.
வெளியான அறிக்கை
நாட்டின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் (PIPC) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், சுமார் 33 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் முக்கியமான தரவுகளை கசியவிட்டதோடு, சட்டப்படி 72 மணி நேரத்திற்குள் இந்த விதிமீறலைத் தெரிவிக்கவும் தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

அதிநவீன ஹேக்கிங் முறையினால் இந்தத் தவறு நடக்கவில்லை என்றும், நிறுவனத்தின் மோசமான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முகாமைத்துவ குறைபாடுகளே இதற்குக் காரணம் என்றும் அரசு விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தற்போது அமெரிக்க மற்றும் தென் கொரிய அரசியல்வாதிகளுக்கு இடையே ஒரு புதிய வர்த்தக ரீதியான அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அபராதத் தொகைக்கு எதிராக கூபாங் நிறுவனம் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாகப் போராடப் போவதாக அறிவித்துள்ளது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 14 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri