தென்னிந்திய மூத்த பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
தமிழ் உட்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த தென்னிந்திய பாடகி ஆஷா போஸ்லே தனது 92ஆவது வயதில் காலமானார்.
நேற்று (11) ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆஷா போஸ்லே நுரையீரல் நோய் மற்றும் வயது தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளுடனும் போராடி வந்தததாக தெரிவிக்கப்படுகின்றது.
மாரடைப்பு
பஜனைகள் முதல் கேபரே பாடல்கள் வரை, அனைத்து வகையான பாடல்களையும் பாடியுள்ளார்.

1933ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி பிறந்த ஆஷா போஸ்லே, தனது 10ஆவது வயதில், அதாவது 1943ஆஆம் ஆண்டில் பாட ஆரம்பித்துள்ளார்.
தனது 90ஆவது வயதிலும் அவர் தொடர்ந்து பாடி வந்தார். ஹன்ஸ்ராஜ் பாஹ்ல், ஓ. பி. நய்யார், மதன் மோகன், ஆர். டி. பர்மன், இளையராஜா, அனு மாலிக் முதல் ஏ. ஆர். ரஹ்மான் வரையிலான கலைஞர்களுடன் அவர் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், அவரின் இறுதிக்கிரியைகள் திங்களன்று (ஏப்ரல் 13) மாலை 4 மணிக்கு, சிவாஜி பார்க் மயானத்தில் நடைபெறும் என்று மகாராஷ்டிர கலாசாரத் துறை அமைச்சர் ஆஷிஷ் ஷேலார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri