திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் விஜயகாந்த்
தே.மு.தி.க தலைவரும் தென்னிந்திய தமிழ் நடிகருமான விஜயகாந்த் திடீரென சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்திற்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மருத்துவ சிகிச்சைகளை நிறைவுசெய்து, இன்னும் ஒரீரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானதை அடுத்து , அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி
குறிப்பாக கடந்த சில மாதங்களாக பேச்சில் மாத்திரமல்லாமல், உடல் ரீதியாகவும் தளர்வடைந்துள்ள விஜயகாந்த், பொதுநிகழ்வுகளில் அரிதாகவே பங்கேற்றுவருகின்றார். எழுந்து நடக்க முடியாத ஒருவராக இருக்கும் அவரை, மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கான விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் ஆகியோரே கவனித்துவருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி அமைக்கும் என விஜயகாந்தே அறிவிப்பார் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அவரது ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் விஜயகாந்தின் உடல்நிலை பற்றி தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் அவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam