புதிய உலக சாதனை படைத்த தென்னாபிரிக்க அணி
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களுக்கு 258 ஓட்டங்களை எடுத்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே Centurion மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி இந்த புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
இதன்படி சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை எடுத்து புதிய உலக சாதனையை தென்னாபிரிக்கா படைத்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பின்னர், 259 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 18.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது.
இந்த வெற்றியின் ஊடாக இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சாதனையை தென்னாபிரிக்க அணி படைத்துள்ளது. மேலும் இருபதுக்கு 20 போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகவும் இது பதிவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
