அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறிய தென்னாபிரிக்கா மகளிர்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் மகளிருக்கான உலகக் கிண்ண 20க்கு20 போட்டிகளின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி, அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.
இதில் பெத் மூனி 44 ஓட்டங்களை பெற்;றுக்கொடுத்தார்.
இரண்டாவது அரையிறுதி ஆட்டம்
இதனையடுத்து துடுப்பாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 135 ஓட்டங்களை பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
அந்த அணியின் சார்பில் அன்னேக் போஷ் 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதற்கிடையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நாளை மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையில் சார்ஜாவில் இடம்பெறவுள்ளது.
இதில் வெற்றி பெறும் அணி, எதிர்வரும் 20ஆம் திகதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
