கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை
ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக, கடன் வாங்கும் வரம்பை 9,000 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நாடாளுமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளது.
அரசாங்கத்திற்கு இந்த திட்டம் உதவும்
நாட்டிற்கான நிதி திரட்ட சர்வதேச சந்தைக்கான அணுகலை இழந்துள்ள நிலையில், உள்நாட்டு கடன்கள் மூலம் கடன் சேவை கொடுப்பனவுகள், தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கத்திற்கு இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் பெறுவதற்கான உச்ச வரம்பு தற்போது 4,979 பில்லியனாக உள்ள நிலையில் 13,979 பில்லியனாக அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை வெளியிட உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் பொது நிதி தொடர்பான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதன் மூலம் திறைசேரி நடவடிக்கைகளின் சேவைச் செலவு மற்றும் மூலதனச் செலவினங்களை அதிகரிக்க, நாடாளுமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




