விரைவில் எமது ஆட்சி மலரும்-அனுரகுமார திஸாநாயக்க
விரைவில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமையும் என்பதால், நாட்டை விட்டு செல்ல வேண்டாம் என தொழில்சார் நிபுணர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உணர்ச்சியற்ற தலைவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்தினர்
நாட்டை கைவிட்டு செல்லாது நாம் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். எமது நாட்டை ஆட்சி செய்வது யார்?.
சாராய தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், மணல் வியாபாரிகள், மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள், கொள்ளையர்கள், குற்றவாளிகள் இந்த நாட்டை ஆட்சி செய்தனர்.
ஈவிரக்கமற்றவர்களே நாட்டை ஆட்சி செய்தனர். உணர்ச்சியற்ற தலைவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்தி மக்களின் சம்பளத்திலும் கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.
நாட்டில் தொழில்சார் மனித வளம் 15 வீதம், அவர்களின் சம்பளத்திற்கு பெருந்தொகை வரியாக அறவிடப்படுகிறது. வங்கிகளின் உயர் மட்ட முகாமையாளர்கள் 500 பேர் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டம் மாதம் வரை 500 மருத்துவர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் 474 மருத்துவர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
