ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் முஹம்மர் கடாபியின் புதல்வர் : செய்திகளின் தொகுப்பு
லிபியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அந்நாட்டின் முதலாவது நேரடியான ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட, லிபியாவின் முன்னாள் ஆட்சித் தலைவர் முஹம்மர் அல் கடாபியின் (Muammar al Gaddafi) புதல்வர் பதிவு செய்துள்ளார்.
கடந்த காலத்தில் தனது தந்தையின் வாரிசாக இருந்த சைஃப் அல் - இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi), 2011 ஆம் ஆண்டு லிபியாவில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான புரட்சியைக் கொடூரமாக அடக்கும் கொள்கைக்கு ஆதரவளித்தார்.
இதனால், அவரது புகழுக்குப் பங்கம் ஏற்பட்டது. எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள லிபிய ஜனாதிபதித் தேர்தல், சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தலாக இருக்காது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தமிழ்வின் மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
