கெஹெல்பத்தர பத்மே அதிரடி கைது! பதற்றத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள்
கெஹல்பத்தர பத்மே போன்ற பாதாள உலகக் குழுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சிலர் பதற்றமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுக்கான அவகாசம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த அரசியல் தரப்புக்களுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையிலான உறவு தகர்க்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிகாரிகள் தாங்கள் விரும்பியவாறு சுயாதீனமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த அவகாசம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழு தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது எவ்வித அரசியல் தலையீடுளும் இன்றி அவர்கள் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அரசியல்வாதிகள் பொலிஸ் விவகாரங்களில் தலையீடு செய்யாவிட்டால் எமது அதிகாரிகள் எந்தளவு திறமையானவர்கள் என்பது கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினால் ஒரு சில அரசியல்வாதிகள் பதற்றமடைந்துள்ளனர் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 6 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
