மக்களின் பொருளாதார கஷ்டங்களை சிலர் தவறாக பயன்படுத்தினர்-மகிந்த ராஜபக்ச
இலங்கை பல சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் மக்களை குழப்பி கேள்விகளை எழுப்பவதன் மூலம் மட்டும் எந்த பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது எனவும் மு்னனாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளா்.
புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களை குழப்புவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை உண்மையில் தீர்க்க வேண்டியவது அவசியம். மக்களை குழப்பவதன் மூலம் அந்த பிரச்சினைகளை எப்போதும் தீர்க்க முடியாது.
சிலர் பதில் எனக்கூறி மீண்டும் கேள்வியை கேட்கின்றனர். மேலும் சிலர் கேள்வியை வேறு விதமாக கூறுகின்றனர். நாம் களுத்துறை ஆரம்பத்த பயணம் நாவலப்பிட்டிக்கு சென்று இன்று ஆராச்சிக்கட்டுவவிற்கு வந்துள்ளது.
அனைத்து இடங்களில் மக்கள் எமக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர். எமது எதிர்கால வேலைத்திட்டங்களுக்காக நீங்க காட்டி வரும் அர்ப்பணிப்பை பாராட்டவும் இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்.
சிலர் பல்வேறு அவதூறுகளை முன்வைத்தாலும் நாங்கள் எப்போதும் நாட்டுக்காக வேண்டும் என்றே தவறான தீர்மானங்களை எடுக்கவில்லை. எடுக்கவும் மாட்டோம். இதனால், எம்மை எவரும் குற்றவாளிகள் எனக்கூற முடியாது.
சிலர் எம்மை அவமதிக்கின்றனர். அதன் நீளம், அகலம் தெரியாமலேயே அவர்கள் அவதூறு செய்கின்றனர்.கோவிட்டுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார சரிவு பற்றி நீங்கள் புரிந்துக்கொண்டிருக்கலாம்.
நுண்ணுயிர் கொல்லி தடுப்பூசிகளை கொண்டு வந்து மக்களை வாழவைக்கவே நாங்கள் முன்னுரிமை வழங்கினோம்.அடுத்ததாக வந்த பொருளாதார சவால் தற்போதும் எம் அனைவருக்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளது.
மக்களின் இந்த பொருளாதார கஷ்டங்களை சிலர் தவறான பிரயோசனப்படுத்திக்கொண்டனர். சிலர் தற்போது மக்களை தூண்டி வருகின்றனர். ஆனால், நாட்டுக்காக பொறுப்பை ஏற்குமாறு கூறினால், முடியாது என்கின்றனர்.
இது பைத்தியகாரர்கள் குழம்பினாலும் மருத்துவர்கள் குழம்பமாட்டார்கள் என்ற கதையை போன்றது.விழுந்த இடத்தில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே எமது முறையே அன்றி நாட்டை பின்நோக்கி தள்ளிவிடுவதல்ல.
இன,மத பேதங்களுடன் முன்நோக்கி சென்றால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது
தீமூட்டுவது இலகுவானது, கட்டியெழுப்புவது கடினம். நாம் கட்டியெழுப்பும் பக்கம் நிற்கவேண்டுமே அன்றி தீமூட்டும் பக்கம் அல்ல. வடமேல் மாகாண மக்களுக்கு வன்செயல்கள் குறித்து நன்கு தெரியும்.அதனை புதிதாக நினைவூட்ட தேவையில்லை.
நாங்கள் இந்த மாகாணத்தில் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது எனக்கு நினைவில் இருக்கின்றது. பிரச்சினைகளுக்கு அஞ்சாது, நாட்டின் சவாலை ஏற்றுக்கொள்ளும் அணிக்கு மாத்திரமே பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும்.
தற்போதும் அதற்கு தகுதியானவர்கள் பொதுஜன பெரமுனவினர் மட்டுமே என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதன் காரணமாகவே தேர்தலுக்கு தயார் என்று நாங்கள் கூறுகிறோம்.
தவிர்க்க முடியாத சில தவறுகள் நடக்கலாம். அவை தவறு. ஜனநாயகத்தை மதிப்பதன் காரணமாக தடுக்க முடியாது தவறிய சில விடயங்கள் உள்ளன. எனினும் அவை எதுவும் எமது தோல்விகள் அல்ல.
இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் அனைத்து சகோதரர்களும் இருக்கின்றனர். இந்த பிரதேசத்தில் ஐக்கியமாக வாழ்கின்றனர். நாம், கட்சி, நிறம், இன, மத, ஜாதி பேதங்களுடன் முன்நோக்கி சென்றால், எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.