பசிலின் நட்பு வட்டத்தில் சில புலம்பெயர் அமைப்புக்கள்! நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா மௌனம் (VIDEO)
இலங்கையின் நிதியமைச்சர் பசிலின் நட்பு வட்டத்தில் சில புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்காவின் சால்ஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை பேராசிரியர் கீதபொண்கலன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் வெளிவிவகார செயற்பாட்டினை பொருத்து நோக்குகையில்,இலங்கையில் தனது செல்வாக்கினை அதிகரிக்க அமெரிக்கா இரண்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தது.
இவை கோட்டாபயவின் அரசியலில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இலங்கை குறித்த அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கையை பொருத்தமட்டில் ஏமாற்றகரமான ஒன்றாகவே காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.