அசாதாரண காலநிலை காரணமாக யாழில் சில குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) மழையினால் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழில் கடந்த சில வாரங்களாக அதிக வெப்பமான காலநிலை நிலவி வந்த நிலையில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுகின்றது.
பாதிக்கபட்ட குடும்பங்கள்
இந்த நிலையிலேயே யாழில் இரு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில், ஜே/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும், ஜே/33 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வேலணை பிரதேச செயலர் பிரிவில், ஜே/26 கிராம சேவகர் பிரிவில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri