புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை : ஒருவர் கைது
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (17.05.2024) காலை 8 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீர் சுற்றிவளைப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பெரியபிகுளம் பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய கொன்ஸ்தாபிள் பிரதீபனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, கோடா 1702 லீட்டர் , எரிந்த கோடா 30 லீட்டர், கசிப்பு 58 லீட்டர், பரல் 18, கசிப்பு உற்பத்தியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும், தேவிபுரம் பகுதியினைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |