தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சிக்கு இடமளியாதீர்: சம்பந்தன் அறிவுறுத்து
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம் என்றும் அந்த முயற்சிக்குக் கடைசி வரை வாய்ப்பளிக்காதீர்கள் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் இன்றைய தினம் (17.05.2024) தொலைபேசியில் உரையாடிய விடயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்
குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தன் விவரித்ததாவது,
“மாவை சேனாதிராஜாவுடன் இன்று காலை மீண்டும் கலந்துரையாடினேன். வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம்.
அதற்கு எக்காரணம் கொண்டும் தமிழரசுக் கட்சி இணங்கக் கூடாது, இடமளிக்கவும் கூடாது. கட்சிக்குள் இது தொடர்பான விடயத்தை உறுதியாக எதிர்த்து நில்லுங்கள் என்று அவருக்குக் கூறியுள்ளேன்.
சிறீதரனுக்கும், சுமந்திரனுக்கும் இது குறித்து நான் நேரில் விவரமாகத் தெரிவித்துள்ளேன்.
சிறீதரன் தம்மை வந்து சந்தித்து அது பற்றி கூறினார் என்று மாவை சேனாதிராஜா எனக்குப் பதில் அளித்தார்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா





சுவர்களில் ஜேர்மன் வாசகம்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த பிரித்தானிய தம்பதி News Lankasri

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

Neeya Naana: காலையில் வைக்கும் சாதம் இரவு வரை கெட்டுப்போகாமல் இருக்குமா? அரங்கத்தில் பெண் கூறிய டிப்ஸ் Manithan
